முத்தமிழறிஞர், மாண்புமிகு மேனாள் முதல்வர், தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களின்மேல் அபாண்டமாக மேம்பால ஊழல் சுமத்திய திரு.இராஜேந்திரனுக்கா, இந்த ஆட்சியில் சென்னை மாநகராட்சியில் அனைத்து அதிகாரங்களும் ஒருங்கே உள்ள வகையில் தலைமைப் பொறியாளர் பதவி அளித்து மணி மகுடமா?2001 முதல் 2006ஆம் ஆண்டு வரை செல்வி ஜெயலலிதா ஆட்சியின் போது, சென்னை மாநகராட்சியில் 1996-2001 தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கட்டிய பாலங்களில் முறைகேடு என ஒரு பொய்யான எந்த முகாந்திரமும் இல்லாத ஒரு குற்றச்சாட்டை […]

ஐக்கிய அரபு அமீரகம், ஓமனில் டி20 உலக கோப்பை – ஐசிசி அறிவிப்பு. ஐக்கிய அரபு அமீரகம், ஓமனில் டி20 உலக கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது.டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடப்பாண்டு இந்தியாவில் நடைபெறுவதாக இருந்தது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தற்போது, ஐக்கிய அரபி அமீரகம், ஓமனில் நடைபெறும் என்று ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.இத்தொடர் வருகிற அக்டோபர் 17-ம் தேதி தொடங்கி நவம்பர் […]

சர்வதேச சந்தையை கலக்கும் மியாசாகி மாம்பழம் ஒரு கிலோ விற்றால் நீங்களும் லட்சாதிபதி மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சங்கல்ப் பரிஹார்-ராணி தம்பதி. இவர்கள், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னைக்கு ரயிலில் பயணித்த போது மியாசாகி மரக்கன்றினை இவர்களுக்கு ஒருவர் அளித்துள்ளார். அதனை, தங்களுடைய தோட்டத்தில் வைத்து வளர்த்துள்ளனர்.மாமரம் வளர்ந்த பிறகு தான் மியாசாகி என்ற அரிய வகை மாம்பழம் என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து, […]

தமிழக பொருளாதாரத்தை மேம்படுத்த முதல்வருக்கு பொருளாதார ஆலோசனைகளை வழங்க ஐவர் குழுவை அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளார். இந்த நடவடிக்கை சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.கொரோனா வைரஸின் முதல் அலை கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கியது. அப்போது, நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதை தொடர்ந்து, சிறு, குறு தொழில்கள் முதல் பெரிய நிறுவனங்களின் வணிகங்கள் வரை அனைத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டன. முதல் அலையின் தாக்கம் குறைந்தவுடன் […]

சென்னை, ஜூன் 23- ‘ஒன்றிய அரசு’ என்று அழைப்பது ஏன் என்பது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.மத்திய அரசை ஒன்றிய அரசு என்று தமிழக அரசு மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அழைத்து வருகின்றனர். இதற்கு ஒரு தரப்பினர் ஆதரவும் ஒரு தரப்பினர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.இந்த சூழலில் இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டமன்ற கூட்டத்தில் விளக்கம் அளித்து பேசியதாவது:‘ஒன்றிய அரசு’ என்று சொல்வதை, […]

சென்னையில் கோவேக்ஸின் தடுப்பூசி 2-வது தவணை செலுத்த சிறப்பு ஏற்பாடு. நாளை முதல் 2 நாட்கள் நடக்கிறது சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கோவேக்ஸின் தடுப்பூசி இரண்டாம் தவணை செலுத்திக்கொள்ள நாளை முதல் 2 நாட்களுக்குசிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இது தொடர்பாக, சென்னை மாநகராட்சியின் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னையில் இதுநாள் வரை 17,58,187 முதல் தவணை தடுப்பூசியும், 6,04,804 இரண்டாம் தவணை தடுப்பூசியும் என மொத்தம் 23,62,991 கரோனா […]

Author

Saajaa Guna