முதல்வர் பழனிச்சாமிக்கு பிரதமர் மோடி பாராட்டு

சீன அதிபர் ஜின்பிங் மாமல்லபுரம் வருகையின் போது தமிழக அரசு மேற்கொண்ட சிறப்பான ஏற்பாட்டை பாராட்டி பிரதமர் நரேந்திர மோடி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்திய – சீன உச்சி மாநாட்டிற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்தமைக்காக  தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு பாராட்டு தெரிவித்து, பிரதமர் நரேந்திர மோடி கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த 11, 12ம் தேதிகளில் மாமல்லபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜின்பிங் சந்தித்து பேசினர். இந்த நிகழ்ச்சி குறித்து தமிழக அரசுக்கு, பிரதமர் மோடி பாராட்டு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், சீன அதிபரின் வருகையின்போது சிறப்பான வரவேற்பு, அன்பான உபசரிப்பு போன்றவை நமது நாட்டின் கலாசாரத்தை பிரதபலித்தன. மாமல்லபுரம் வந்தது தனக்கும், சீன அதிபருக்கும் மறக்க முடியாத நிகழ்வாக இருந்தது. மாநாடுக்கு சிறப்பான ஏற்பாடு செய்த தமிழக அரசுக்கு நன்றி, என பிரரதமர் கடிதம் எழுதியுள்ளார்.

காந்தள் களம்

Next Post

அரிசி ஆலையில் தொடங்கி அரசியல் தலைவரான கேப்டன் விஜயகாந்த்... கிங் ஆவாரா?

Fri Oct 25 , 2019
எனக்கு என் பொண்டாட்டிக்கும் கொஞ்சூண்டு பழைய சோறும் பச்சை வெங்காயமும் போதும்… என்று காஞ்சிபுரம் மாநாட்டில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெள்ளந்தியாக பேச… கூட்டத்தில் கை தட்டலும் விசிலும் பறக்கிறது. விஜயகாந்த் என்றாலே கோபத்தில் கண்கள் சிவக்க நாக்கை துருத்தி அடிக்கப் பாய்வதும், யாருக்குமே புரியாத மாதிரி பேசுவது தான் இன்றைக்கு பலரது நினைவுக்கு வரும். ஆனால் விஜயராஜாக இருந்து விஜயகாந்தாக மாறிய அவரது வாழ்க்கைப் பயணத்தை பலரும் அறிந்திருக்க […]

Author

Saajaa Guna