தாவணி பறந்தது
தாடி வளர்ந்தது…
தாவணிகளின் எண்ணிக்கையை என் தாடிக்குள் கண்டேன்…
காதல் ஒரு முறை பூத்திருந்தால் மறந்திருக்க மாட்டேன். காதல் தினம் தினம் பூக்கும் மலரைப் போன்றதல்லவா. அதனால்தான் காதல் எனுக்குள் பூத்துக் கொண்டே இருப்பதை மறக்காமல் இருக்கவே தாடியால் எண்ணிக் கொள்கிறேன்…
விரைவுப் புறாக்கள் என்னை தினமும் கடந்து செல்வதால் அதன் விவரங்களை மறந்திடாமல் இருக்கவே ஆவணப்படத்தியுள்ளேன் தாடியாய் என் முகத்தில்…
கடவுளுக்கு செலுத்தும் முடி காணிக்கை அல்ல என் தாடி. என் காதலிக்காக நான் செய்த முடிக்கயிற்று ஊஞ்சல்…
கிளி பறந்திடிச்சி
தாடி வளர்ந்திடிச்சி…
என்னவளுக்காக நான் வளர்த்த தாடி ஆம் அவள் அவ்வப்போது இளைப்பாறுதல் பெறவே என் முகத்தில் நான் கட்டிய கூடு. கண் இமையை காப்பது போல் அவளை காப்பது என் கடமை அல்லவா…
என் கன்னத்தில் படர்ந்திருப்பது தாடியல்ல என் காதலி என் காதலுக்காக ஏற்றிய கொடிகள்…
துறந்து பார்க்க வேண்டாம் பறந்து போன என் இதயத்தை தூரத்தில் நின்றே பார்க்கலாம் என் தாடிக்குள் கசிங்கிக் கிடக்கும் இதய சிறகுகளை…
சிறகடித்து பறந்தாள்
தாடி எனும் சிறைக்குள் என்னை கிடத்தி…