வான்பரப்பில் நடந்து போகும் நிலா பெண்ணின் மீது வாய்வைத்து எச்சில் சிந்தாத கவிஞர்கள் உண்டோ..

காதல் மனம் பரப்பி படர்ந்திருக்கும் உன் கூந்தல் வனத்தில் திருதிருவென நின்றே கிடக்கிறேன் உன் உள்ளமெனும் ஊரில் நீ கண்டதுண்டோ என் மகிழ்ச்சிக்குறியவளே…

இந்த பூமியில் அந்த சந்திரனைப் போல் பூத்து குலுங்கும் அதிசய மலரே
உன் தேகம் அழகில் வழிந்த போது என் இருதயம் அதிலே நீச்சல் அடிக்கிறது…
சலிப்பு காட்டும் உன் முகம் காண்கையில் சலிக்காமல் களிப்படைகிறது என் அகம்…

நீ துவைத்துப் பிழிந்த என் இதயம் இதோ காதல் வனத்தில் அமரமுடியாமல் திருதிருவென நின்றிருக்கிறது உன் உள்ளமெனும் ஊரில் உணர்ந்திடு உலர்த்தி விடாதே என் பிரியமானவளே…
- பவித்ரன். திரு