நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஆண் குழந்தை

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஆண் குழந்தை

குவியும் வாழ்த்து

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு மகன் பிறந்துள்ளதை தொடர்ந்து அவருக்கு வாழத்துகள் குவிந்து வருகிறது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் கடந்த 2010-ம் ஆண்டு தனது உறவினர் ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆராதன என்ற 7வயது மகள் உள்ளார். இரண்டாவதாக தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இந்த சூழலில் தனது மகன் தன்னுடைய கை விரலை பிடித்தபடி இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு ’18 வருடம் கழித்து என் அப்பா என் விரலைப் பிடித்து இருக்கிறார்கள் மகனாக’ என்று நெகிழ்ச்சியுடன் பதிவு செய்துள்ளார்.
மேலும் அந்த பதிவில், 18 வருடங்களுக்குப் பிறகு இன்று என் அப்பா என் விரல் பிடித்திருக்கிறார் என் மகனாக. என் பல வருட வலி போக்க தன் உயிர்வலி தாங்கிய என் மனைவி ஆர்த்திக்கு கண்ணீர்த்துளிகளால் நன்றி அம்மாவும் குழந்தையும் நலம்’ என்று பதிவு செய்துள்ளார். அவருக்கு சினிமா நட்சத்திரங்கள், ரசிகர்கள் என பல தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Kaanthalkalam

Next Post

மக்கள் மன்றம் கலைப்பு

Wed Jul 14 , 2021
மக்கள் மன்றம் கலைப்பு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை நடிகர் ரஜினிகாந்த் திட்டவட்டம் மக்கள் மன்றம் கலைக்கப்படுவதாகவும், வரும் காலத்தில் அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கும் உறுப்பினர்களுக்கும் என்னை வாழ வைத்த தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கும் வணக்கம். நான் அரசியலுக்கு வர முடியவில்லை என்று சொன்ன பிறகு, ரஜினி மக்கள் மன்றத்தின் […]

Author

Saajaa Guna