உலககோப்பை டி 20 கிரிக்கெட் போட்டியில் ஒரே பிரிவில் இடம் பிடித்த இந்தியா, பாகிஸ்தான்.

உலக கோப்பை டி20 போட்டியில் ஒரே பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இடம் பெற்றுள்ளது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐ.சி.சி டி20 உலக கோப்பை போட்டிகள் வரும் அக்டோபர் 17-ம் தேதி தொடங்கி நவம்பர் 14-ம் தேதி நிறைவடைய உள்ளது. இதற்கான அணிகள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, குரூப் 1 மற்றும் குரூப் 2 என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளன.
இவற்றில் குரூப் 1பிரிவில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 4 அணிகளும், குரூப் 2பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய 4 அணிகளும் இடம் பெற்றுள்ளன. இந்தியா பாகிஸ்தான் அணிகள் ஒரே பிரிவில் இடம் பெற்றுள்ளதால் லீக் பொட்டியிலேயே மோதும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், தற்போதில் இருந்தே சமூக வலைத்தளங்களில் இந்திய அணியின் கேப்டன் கோலியா பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமா என்று விவாதங்கள் களைக்கட்ட தொடங்கியுள்ளது.

Kaanthalkalam

Next Post

கவர்ச்சியால் கிளர்ச்சியூட்டிய யாஷிகா

Sun Jul 18 , 2021
தமிழ் திரையுலகில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தின் மூலமாக பிரபலமடைந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். இந்த படத்திற்கு பின்னர் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் பெரிய அளவிலான படத்தின் வாய்ப்புகள் ஏதும் கிடைக்காத காரணத்தால், அவ்வப்போது சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் ஆபாசமாக நடித்திருந்த இவர், துருவங்கள் பதினாறு மற்றும் நோட்டா […]

Author

Saajaa Guna