தமிழ்நாட்டில் மூன்றாவது மொழியாக இந்தி! ஆளுநரும், தலைமை நீதிபதியும் மாணவர்களுக்கு அறிவுரையா! – பழ. நெடுமாறன் அறிக்கை.

தமிழ்நாட்டில் மூன்றாவது மொழியாக இந்தி!
ஆளுநரும், தலைமை நீதிபதியும் மாணவர்களுக்கு அறிவுரை! – தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:

“இந்தியாவின் பிற மாநில மாணவர்கள் தங்கள் தாய்மொழியைத் தவிர, பிற மாநில மொழிகளைக் கற்கிறார்கள் என்றும், அதைபோல தமிழக மாணவர்கள் இந்தி உள்பட பிற மாநில மொழிகளைக் கற்றுக்கொள்ள வேண்டும்” என்று தமிழக ஆளுநர் கூறியுள்ளார்.

அதைபோலவே, சென்னை உயர்நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதியும் தமிழ்நாட்டு மாணவர்கள் தமிழ், ஆங்கிலத்தோடு மூன்றாவது மொழியாக இந்தியைக் கற்றுக்கொள்ள வேண்டும். அதன்மூலம் பிற மாநிலங்களில் அவர்களுக்கு வேலை வாய்ப்புகள் பெருகும் என்றும் கூறியுள்ளார்.

இந்தியாவின் தலைமையமைச்சராக லால்பகதூர் சாஸ்திரி இருந்தபோது, இந்தி, ஆங்கிலம், மாநிலங்களின் தாய்மொழி ஆகிய மூன்று மொழிகளை அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களும் கற்கவேண்டும் என சட்டம் கொண்டுவந்தார். அதாவது, வட இந்திய மாணவர்கள் இந்தி, ஆங்கிலம் ஆகியவற்றுடன் தென்னிந்திய மொழிகளில் ஏதாவது ஒன்றை கற்றுக்கொள்ளவேண்டும். தமிழக மாணவர்களும் தமிழ், ஆங்கிலம் ஆகியவற்றுடன் மூன்றாவது மொழியாக இந்தியைக் கற்கவேண்டும் என்றும் கூறினார். ஆனால், இதுவரை வடஇந்திய மாநிலங்களில் எந்தவொரு மாநிலத்திலும் மும்மொழித் திட்டம் பின்பற்றப்படவில்லை. தமிழ் உள்பட தென்னிந்திய மொழிகளில் ஒரு மொழியைக் கூட வடஇந்திய மாணவர்கள் கற்க ஏற்பாடு இதுவரை செய்யப்படவில்லை. இந்த உண்மையை அறியாமல் தமிழக ஆளுநரும், தலைமை நீதிபதியும் தமிழக மாணவர்களை மூன்றாவது மொழியாக இந்தியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுரைக் கூறியிருப்பது நகைப்புக்குரியதாகும்.

தமிழக மாணவர்கள் இந்தி படித்தால் பிற மாநிலங்களில் வேலை வாய்ப்புக் கிடைக்கும் என்று கூறுவதும் வேடிக்கையானதாகும். இந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் அங்கு வேலைவாய்ப்பில்லாமல் தமிழ்நாட்டை நோக்கி வந்து வேலை பார்க்கிறார்கள். மேலும் இந்தியில் பட்டம் பெற்றவர்கள் இலட்சக்கணக்கில் வேலை வாய்ப்பில்லாமல் இந்தி மாநிலங்களில் தவிக்கிறார்கள் என்பது போன்ற உண்மைகளை உணராமல் பேசுவது தமிழக மாணவர்களுக்குத் தவறான வழிகாட்டுதல்களாக அமையும் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

Kaanthalkalam

Next Post

கார்கோடகனை காத்த ஈசன்.! - ஆதலால் மக்களை காக்கும் கார்கோடகன்.! விஷக்கடி இல்லாத அதிசயம் மற்றும் பல அற்புதங்கள் நிறைந்த அரவூர் கிராமம்

Fri Jan 28 , 2022
நம் நிழல் நம் கால்களுக்குள் சுருங்கிக் கிடக்கும் உச்சிப் பொழுது. அந்த வெயிலையும் பொருட்படுத்தாமல், நம்மை அழைத்துப்போக நீடாமங்கலத் திலிருந்து திருவாரூர் செல்லும் சாலையில் வெயிலில் காத்திருந்தார் அந்த அடியார். கடும் வெயிலில் காத்திருக்கும் அவரைக் கண்டதும் வணங்கினோம். முகம் மலர வரவேற்றார். “இதோ ஒரே ரோடு… 3 கி.மீ தூரம்தான் அரவூர்” என்று சொல்லி நம்மை வழிநடத்தினார். அப்போதுதான் அறுவடை முடிந்து விளைநிலங்கள் எல்லாம் வெறுமனே கிடந்தன. முதியவர்கள் […]

Author

Saajaa Guna