பஞ்சமி நிலத்தை மீட்க முரசொலி அலுவலகம் முற்றுகை – நாகர்சேனை அமைப்பு அதிரடி !

அசுரன் படம் வெளியானதை தொடர்ந்து பஞ்சமி நிலம் தொடர்பாக பல்வேறு விவாதங்கள் எழுந்து வந்தது ! அதன் தொடர்ச்சியாக திமுக வின் முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது !

இது குறித்து பாஜக மாநில செயலாளர் பேராசிரியர் சீனிவாசன் தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் அளித்து இருந்தார்! புகாரை விசாரித்த ஆணையம் இந்த புகார் தொடர்பான ஆவணங்களுடன் நேரில் ஆஜராக தமிழக அரசின் தலைமை செயலாளருக்கு கடிதம் அனுப்பி உள்ளது !

இந்நிலையில் வரும் 18-11-2019 அன்று பல்வேறு சமூக அமைப்புகள் , சமூக ஆர்வலர்கள் ஆகியோர் உடன் இணைந்து திமுக வின் முரசொலி அலுவலகத்தை முற்றுகையிட போவதாக நாகர் சேனை அமைப்பு அறிவித்து உள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை அதிகப்படுத்தி உள்ளது !

Kaanthalkalam

Next Post

இந்தியன் 2 : 85 வயது மூதாட்டியாக நடிக்கும் காஜல் அகர்வால்!

Wed Nov 6 , 2019
22 வருடங்கள் கழித்து கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2 படத்தில் 90வயது முதியவராக நடிக்கிறார். படத்தின் ஷூட்டிங் படு பிஸியாக நடந்து வருகிறது. இதில் கமல்ஹாசன் 90வயது முதியவராகவே மாறி மிக கச்சிதமாக நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் அதற்கான ஷூட்டிங் போட்டோஸ் வெளியானது. அதை கண்ட பின்பு கண்டிப்பாக இந்தியன் படத்தை விட இரண்டாம் பாகம் தமிழ் சினிமாவில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ரசிகர்கள் கூறினர் இந்த நிலையில் இந்தியன் […]
Kaanthalkalam

You May Like

Author

Saajaa Guna