இந்தியன் 2 : 85 வயது மூதாட்டியாக நடிக்கும் காஜல் அகர்வால்!

Kaanthalkalam

22 வருடங்கள் கழித்து கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2 படத்தில் 90வயது முதியவராக நடிக்கிறார். படத்தின் ஷூட்டிங் படு பிஸியாக நடந்து வருகிறது.

Kaanthalkalam

இதில் கமல்ஹாசன் 90வயது முதியவராகவே மாறி மிக கச்சிதமாக நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் அதற்கான ஷூட்டிங் போட்டோஸ் வெளியானது. அதை கண்ட பின்பு கண்டிப்பாக இந்தியன் படத்தை விட இரண்டாம் பாகம் தமிழ் சினிமாவில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ரசிகர்கள் கூறினர்

இந்த நிலையில் இந்தியன் முதல் பாகத்தில் சுகன்யா நடித்திருந்த கதாபாத்திரத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக யார் நடிப்பார் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

தற்போது 80வயது மூதாட்டியாக அமிர்தவள்ளி என்னும் கதாபாத்திரத்தில் காஜல் அகர்வால் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதை கேட்ட காஜல் ரசிகர்கள், ‘என்னது பாட்டி கதாபாத்திரத்தில் காஜல் அகர்வாலா?’ வேண்டாம் ப்ளீஸ்’ என்று கதறி வருகின்றனர்.

இளம் நடிகையாக வலம் வரும் காஜலுக்கு மூதாட்டி கெட்டப் எப்படி பொருந்தியுள்ளது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். மேலும் இதில் சித்தார்த்,ப்ரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், விவேக் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இந்தியன் படத்தில் ஊழல், லஞ்சம் ஆகிய தளங்களை அடிப்படையாகக் கொண்டு வெளியானது. அதன் தொடர்ச்சியாக வெளியாகும் இந்தியன் 2 படம் இப்போதைய காலகட்டத்திற்கு மிகவும் அவசியம் என்பதால் கண்டிப்பாகப் படம் ஹிட் அடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியன் 2 படம் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

காந்தள் களம்

Next Post

வரலாறு காணாத காலநிலை பேராபத்து! அரசுகளின் மவுனம் ஏன் ?

Thu Nov 7 , 2019
புவிவெப்பமடைவதன் காரணமாக வரலாற்றில் இருந்திராத மாபெரும் இயற்கை மாற்றங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. தற்போது, இந்திய பெருங்கடல் மற்றும் மேற்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் 4 புயல்கள் நிலைக்கொண்டுள்ளன (படம்: Maha, Bulbul, Nakri, Halong). உலகம் முழுவதுமாக தற்போது சிறிதும் பெரிதுமாக 7 புயல்கள் உள்ளன. இந்திய கடல்பரப்பில் அதிக பட்சமாக 7 புயல்கள் 2018 ஆம் ஆண்டு உருவானது. ஆனால், இந்த ஆண்டு நவம்பர் மாதமே 7 ஆவது புயலாக […]

Author

Saajaa Guna