தஞ்சை பெரியகோவில் குடமுழுக்கு தமிழிலேயே நடத்த வலியுறுத்தி ஆலோசனை கூட்டம்!

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு தமிழிலயே நடைபெற வேண்டும்!

தஞ்சை பெரிய கோவில் உரிமை மீட்புக்குழு விரிவான கலந்தாய்வுக் கூட்டம்!

உலகமே வியக்கும் வகையில், தஞ்சையில் தமிழ்ப் பேரரசன் இராசராசசோழன் கட்டி எழுப்பிய பெருவுடையார் கோயிலின் குடமுழுக்கு விழா வரும் 5.02.2020 அன்று நடத்தப்படவுள்ளது. அக்குடமுழுக்கு விழா, தமிழ்ச் சைவ ஆகம நெறிகளின்படி தமிழ்வழிலேயே நடைபெற வேண்டும் என தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு கோரியுள்ளது.

கடந்த 17.12.2019 அன்று, தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் இதுகுறித்த கோரிக்கை மனுவை தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழுத் தலைவர் திரு. ஐயனாவரம் சி. முருகேசன், செயலாளர் திரு. பழ. இராசேந்திரன் ஆகியோர் வழங்கியுள்ளனர்.

இந்நிலையில், தமிழ்வழியில் குடமுழுக்கை நடத்த தமிழ்நாடு அரசை வலியுறுத்தி நாம் எடுக்க வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்தாய்வு செய்ய – வரும் 29.12.2019 – ஞாயிறு மாலை 5 மணிக்கு, தஞ்சை பெசண்ட் அரங்கில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெறுகின்றது. தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் ஐயா பெ. மணியரசன் உள்பட பலரும் இதில் பங்கேற்கின்றனர்.

Kaanthalkalam

Next Post

பாஜக உடன் நெருக்கம் காட்டும் திமுக எம்பி ?அதிர்ச்சியில் திமுக தலைமை !

Fri Dec 27 , 2019
சென்னை பொத்தேரியில் அமைந்து உள்ள எஸ்ஆர்எம் பல்கலைகழகம் சார்பில் கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் நாளை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது ! இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு கவுரவ டாக்டர் பட்டம் வழங்குவார் என அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு வெளியிடப்பட்டு இருக்கிறது! இந்த நிகழ்வு தான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது ! மத்திய அரசுடன் தொடர்ந்து நெருக்கம் காட்டி […]

Author

Saajaa Guna