தமிழினப்படுகொலை நாள் அவரவர் வீடுகளிலேயே வீரவணக்கம் செலுத்துக! பழ. நெடுமாறன் வேண்டுகோள் உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை : 2009-ஆம் ஆண்டில் இலங்கையில் முள்ளிவாய்க்கால் பகுதியில் சிங்கள இராணுவ வெறியர்கள் ஒன்றரை இலக்கத்திற்கு மேற்பட்டத் தமிழர்களை ஈவிரக்கமின்றிப் பதறப் பதறப் படுகொலை செய்தனர். ஈழத் தமிழர்கள் திட்டமிட்ட இனப் படுகொலைக்கு ஆளாயினர். இந்த நாளை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மற்றும் மனித நேய […]

புரட்சி என்ற சொல்லுக்கேபுது இரத்தம் பாய்ச்சியபெயரல்லவா? வீரம் என்ற சொல்லுக்கேபுது இலக்கணம் வடித்த பெயரல்லவா? அவன் கட்டியெழுப்பியபடைகளிடமிருந்துதான்கற்றுக்கொள்ள வேண்டும்கட்டுப்பாடு என்பதன் அர்த்தத்தை! அவன் ஆயுதம் சினுங்கியவரையில்தன் ஆணவம் அடங்கியல்லவாகிடந்தது ஒரு இனவெறி ராணுவம்! உதடுகள்அவன் பெயரைஉச்சரிக்கும் மறுக்கணமேகோழைக்கும்விரல்களின் நடுவேவிருக்கெனப் புகுந்து விடும்வீரம்! இனவெறியாளரின்பீரங்கிகளும் பின்வாங்கின!பிரபஞ்சமேபிரமித்து நின்றது.வேங்கை அவன் வேகம் கண்டுசிறுநீர் கழித்தபடியல்லவாபல காலம் சிதறி ஓடினசிறு நரிகள்! தான் பிறந்த இனத்திற்க்காகதனியொருவனாகவீரத்தால் விதி் செய்தவன்சதிகளால் மரணித்தும் சாகாவரம்பெற்றுசரித்திரத்தில் வாழும் சிரஞ்சீவி! […]

பெருநகர சென்னை மாநகராட்சியில் 30 ஆண்டுகளாக சென்னையை அரித்துக்கொண்டிருக்கும் ஊழல் கரையான் ஊழலுக்கு புகழ்பெற்ற புகழேந்தி ஓய்வு பெற்ற தலைமை பொறியாளர் மீது நடவடிக்கை எடுப்பாரா? மாண்புமிகு தமிழக முதல்வர் திருமிகு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆவலுடன் மாநகராட்சி ஊழியாகள் மற்றும் பெருமைமிகு சென்னை மக்கள்… ★ திரு. புகழேந்தி 63 வயது வரை சென்னை மாநகராட்சியில் ஜனவரி 2020 வரை தலைமை பொறியாளராக இருந்தவர். இவரின் திறமையில்லாத வேலையால் அசோக் லைலேன்ட் […]

உலகை அச்சுறுத்தும் பெருந்தொற்று நீங்கி, அனைவரும் நலம்பெற்று வாழ்ந்திடவும், அன்பு ஓங்கி, சமாதானம் நிலவிடவும் இஸ்லாமிய பெருமக்களுக்கு ரமலான் நல்வாழ்த்து. ஏழ்மையை அறிந்துகொள்ளவும், பசியின் கொடுமையை உணர்ந்துகொள்ளவும், உடல் நலத்தை பேணிக்காத்து மனிதர்களை மேம்படுத்துவதுதான் புனித ரமலான் நோன்பின் சிறப்பு. இயன்றதைச் செய்வோம் இல்லாதவர்க்கே, என்ற அடிப்படையில் ஏழை, எளியவர்கள் மீது பரிவுகாட்டி, உண்ண உணவளித்து, உடுக்க உடைகொடுத்து, தானதர்மங்கள் செய்து, முப்பது நாட்கள் புனிதநோன்பினை முடித்துக்கொண்டு ரமலான் திருநாளைக் […]

தியாகமும் ஈகையும் இணைந்த மார்க்க நெறியினைப் பின்பற்றி வாழும் இஸ்லாமியப்பெருமக்களுக்கு என் இனிய ரமலான் நல்வாழ்த்துகள்! தமிழக மக்களுக்கே உரிய பெருமைக்குரிய பண்பாடான அனைத்து மத சகோதரத்துவம்என்றென்றும் நீடித்து நிலைத்திருக்கும் வகையில், இந்தப் பெருநாள் அமையட்டும். அரசுவெளியிட்டுள்ள பாதுகாப்பு நெறிமுறைகளைக் கடைப்பிடித்து பெருநாளைக் கொண்டாட அன்புடன்கேட்டுக் கொள்கிறேன். சிறுபான்மை சமுதாய மக்களுக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் என்றும்தொப்புள் கொடி உறவு உள்ளது. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும், நானும் என்றும்இஸ்லாமிய சமுதாய […]

திமுக பொதுச்செயலாளரும் மாண்புமிகு நீர்வளத் துறை அமைச்சருமான திரு. துரைமுருகன்  கண்டனம் ! புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவந்து – அங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்கும் முன்பே மூன்று நியமன எம்.எல்.ஏ.க்களை மத்திய அரசு நியமித்திருப்பது கண்டனத்திற்குரியது. சட்டமன்ற ஜனநாயகத்திற்கு விரோதமான இந்த நடவடிக்கைக்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் எதிர்ப்பை தெரிவித்துக் கொள்கிறேன். “30 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டதுதான் புதுச்சேரி சட்டமன்றம்” எனத் தெளிவாக […]

ஸ்டாலின் ஆட்சியில் தலைமைப் பொறியாளர் நான்தான் சென்னை மாநகராட்சி அலுவலகங்களில் மார் தட்டிக்கொள்ளும் ஊழல் பெருச்சாளி ராஜேந்திரன்.  ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் சென்னை மாநகராட்சி அலுவலகங்களில் பெரும் பொறுப்புக்களை பணியாற்றும் கரை படிந்த ஊழியர்களுக்கு ஒரே குஷிதான். அண்ணன் எப்போ சாவான் திண்ணை எப்போ காலியாகும் என்று உக்காந்துட்டு இருக்கும் பல ஊழியர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலம் வாய்ந்த  ஒரு பெரிய ஊழல் பெருச்சாளி தான் சென்னை மாநகராட்சியின் தலைமைப் பொறியாளராக ஆசைப்படும் […]

பேரிடர் கால நோய் தொற்றுத்தடுப்பு நடவடிக்கையாகக் கருத்தில் கொண்டு தமிழகத்தை ஐந்து மண்டலமாக பிரித்து 5 சுகாதார செயலாளர்களை நியமிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார். நம்பிக்கை; தமிழகத்தில் 12,500 ஆக்சிஜன் படுக்கைகள் கூடுதலாக அமைக்கத் தீவிர நடவடிக்கை எடுக்கப் பட்டு வருவதாகச் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்திருப்பது நம்பிக்கையைத் தருகிறது. கொரோனா நோயாளிகளுக்குச் சென்னையில் கிடைக்கும் வசதிகளும், வாய்ப்புகளும் […]

தமிழர்களின் ஒற்றுமைக்கு தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் வேண்டுகோள். தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில் தமிழகம் வேளிர்களாலும், மூவேந்தர்களாலும் ஆளப்பட்டப் பல்வேறு நாடுகளாகப் பிரிந்து கிடந்தது. தமிழ்ப் பேசும் மக்கள் ஒரே நாடாக என்றும் வாழ்ந்ததில்லை. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தெலுங்கு, கன்னடம், மலையாளம் பேசும் மக்கள் அடங்கிய பகுதிகளோடு தமிழ்நாடும் இணைக்கப்பட்டுச் சென்னை மாகாணமாக விளங்கி வந்தது. 1956ஆம் ஆண்டு […]

Author

Saajaa Guna