தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் : 7பேர் விடுதலைப் பிரச்சனையில் தமிழக ஆளுநர் தொடர்ந்து காலம் கடத்தும் தந்திரத்தைக் கடைப்பிடித்து வருவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.அவரது செயல்பாடு அரசியல் சட்ட மாண்பினை மதிக்காதப் போக்காகும். சிறைவாசிகளை விடுதலை செய்வது குறித்து அமைச்சரவை அளிக்கும் பரிந்துரையை ஏற்றுச் செயல்படவேண்டியது மட்டுமே ஆளுநரின் கடமை என அரசியல் சட்டம் திட்டவட்டமாகக் கூறியிருப்பதை சென்னை உயர்நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. ஆனாலும், […]

சென்னை: புகழ்பெற்ற புற்றுநோய் மருத்துவ நிபுணரும், சென்னை அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் டாக்டர் சாந்தா. இவருக்கு 93 வயது. ஏழை, எளிய மக்களுக்கு புற்றுநோய் சிகிச்சை எளிதில் கிடைக்க அரும்பணியாற்றியவர். இதய நோய் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் டாக்டர் சாந்தா அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அவர் உயிரிழந்தார்.   மேலும் புற்றுநோய் குறித்த ஆராய்ச்சி மற்றும் சிகிச்சைக்காக உலகப்புகழ் பெற்றவர் […]

புதுதில்லி:தில்லியை முற்றுகையிட்டு லட்சோப லட்சம் விவசாயிகள் 45 நாட்களுக்கும் மேலாக தீரமிக்க போராட்டத்தை நடத்திவரும் நிலையில், வேளாண் சட்டங்களை அரசு ரத்து செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. நீங்கள் ரத்து செய்கிறீர்களா? அல்லது நாங்கள் உத்தரவுபிறப்பித்து ரத்து செய்யவா என்று கடும் எச்சரிக்கையையும் மத்திய அரசுக்கு  உச்சநீதிமன்றம் விடுத்துள்ளது. புதிதாக கொண்டுவரப்பட்ட 3 வேளாண்சட்டங்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் மற்றும் தில்லியில் போக்குவரத்து மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு செல்வதற்கு […]

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை: “இலங்கையில் வாழும் சிறுபான்மையினரான தமிழர்களுக்கான உரிமைகளை வழங்குவது, அவர்களுக்கு நீதி கிடைக்கச் செய்வது, சமத்துவத்தை ஏற்படுத்துவது உள்ளிட்ட விவகாரங்களில் அந்நாட்டு அரசே முடிவெடுக்கவேண்டும். இலங்கை அரசமைப்புச் சட்டத்தின் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்தும், அந்நாட்டு அரசுதான் முடிவெடுக்கவேண்டும்” என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இலங்கையின் அதிபரையும், வெளியுறவுத் துறை அமைச்சரையும் சந்தித்துப் பேசிய பிறகு […]

விழுப்புரம்:விவசாயிகள் பிரச்சனையில் மோடி அரசு இரட்டை வேடம் போடுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டி னார். மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தியும், தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிசார்பில் விழுப்புரம் ரயில் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் டிசம்பர் 4 வெள்ளியன்று  நடைபெற்றது.  இப்போராட்டத்திற்கு மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.  பின்னர் அவர் […]

Author

Saajaa Guna